Monday, September 21, 2015

ஒரு சிறந்த பயணத்தின் எடுத்துக் காட்டு


*

இப்போதே பயணப்படுகிறேன்
எனது இயல்பின் மலர்களை
இங்கே விட்டுச் செல்கிறேன்

உடன் பயணிக்க
ஒரேயொரு தென்றலை அல்ல
சற்று வேகமான காற்றை அழைக்கிறேன்

என் பயணங்கள்
என்னை விட வேகமானவை மற்றும்
நூதனமானவை

விட்டுச் செல்லப்படும் மலர்களுக்கு
தனிப்பட்ட பயணங்கள்

அது அவரவர் பிரச்சனை

நான் கேட்டிராத பாடலொன்றை
எனக்கு அளிப்பவன் என் பயணம்

பயணங்கள் சலிப்புற்று திரும்பும்
விருப்பமற்றவை

இப்பொது
நான் ஒரு பயணமாகப்
பரிணமித்து விட்டேன்

என்னைவிட
உடன் வரும் காற்று
ஒரு பயணத்திற்கான
சிறந்த எடுத்துக்காட்டு
மற்றும்
அது மாபெரும் சிறகுகள் கொண்ட ஒரு பறவை
*
கலாசுரன்

No comments:

Post a Comment