Monday, March 14, 2011

கருணையின் பொட்டலம்

*
சற்று முன்
உங்கள் முன்னால்
வைத்துச் சென்ற 
கருணையின் பொட்டலத்தை 
திறவாதிருங்கள்

அதனுள் 
சதாகாலமும் 
இளித்துக்கொண்டிருக்கும்
விலங்கொன்றை 
பதுக்கி வைத்திருக்கிறேன் 

அது 
உங்களை 
எதுவும் செய்து விடலாம் 

அப்படி 
உங்கள் முன்னிருக்கும் 
கண்ணாடி பிம்பத்தில் 
அது 
நிரம்பி நிற்கக்கூடும் 

பிறகு 
அதை 
அடிக்கடிப் 
பார்க்கவேண்டுமென்ற ஆசை
உங்களை
துரத்திக்கொண்டே
இருக்கும்..

கவனம் ..!
*
***
கலாசுரன்
நன்றி உயிர்மை உயிரோசை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4103





1 comment:

Sangeetha said...

ரொம்பவும் பயமுறுத்தும் வரிகள் ..

இருந்தும் அந்தப் பொட்டலத்தை திறந்து பார்க்கவேண்டும்போல் இருக்கிறது ...

வாழ்த்துக்கள்

Post a Comment