அகோர நிகழ்வுகள் அவ்வப்போது
ஆகாயத்திலிருந்து
எரிந்து தொடுவானில் விழுகின்றன....
மேகங்கள் எங்கு தொலைந்தனவோ ?
ஒவ்வொன்றின் வேகமும்
இதயத்துடிப்பின் வேகத்தை
அதிகரிக்கச் செய்கிறது...
பறவை நாகங்கள்
நட்சத்திரங்களை விழுங்குகின்றன...
அசுரன் ஒருத்தன்
மௌனத்தின் எல்லையில்
நிதானமாக உட்கார்ந்தபடி
கவிதை எழுதுகிறான்...
அவனுக்குத் துணையாக
ஒரு சாத்தான் கனல்ப் படுக்கையில்
எதோ பேசிக்கொண்டிருக்கிறான்...
கண்முன் எஞ்சியவை
அழுகின்றன....
வீசிவந்த தென்றல்
சலனமற்று நின்றுவிட்டது....
சூரியன் அந்தப் பெண்ணின்
கூந்தலில் சிக்கியிருக்கக்கூடும் ....
நிலவை ஒரு ஓநாய் தின்று
வாந்திஎடுக்கிறது...
சாக்கடையில் புறா ஓன்று
ஆழ்ந்து தூங்குகிறது....
அரக்கமரத்துக் கிளையில் உட்கார்து
ஒரு கொம்புடைய அணில் வெங்காயம் தின்கிறது....
அந்த அசுரனின் தூரிகை
சலனமற்று நின்றது....
புறா பள்ளத்தாக்கிற்கு
பயணித்தது .....!
கனவுகள் மீண்டும் வரட்டும்
அவன் தூரிகை
மீண்டும் சலனங்களின் கன்னத்தில்
தொடர்ந்து முத்தமிடுவதர்க்காக .....!
நரகங்கள் ரசனைகள் நிறைந்தவை.....!
கலாசுரன்
ஆகாயத்திலிருந்து
எரிந்து தொடுவானில் விழுகின்றன....
மேகங்கள் எங்கு தொலைந்தனவோ ?
ஒவ்வொன்றின் வேகமும்
இதயத்துடிப்பின் வேகத்தை
அதிகரிக்கச் செய்கிறது...
பறவை நாகங்கள்
நட்சத்திரங்களை விழுங்குகின்றன...
அசுரன் ஒருத்தன்
மௌனத்தின் எல்லையில்
நிதானமாக உட்கார்ந்தபடி
கவிதை எழுதுகிறான்...
அவனுக்குத் துணையாக
ஒரு சாத்தான் கனல்ப் படுக்கையில்
எதோ பேசிக்கொண்டிருக்கிறான்...
கண்முன் எஞ்சியவை
அழுகின்றன....
வீசிவந்த தென்றல்
சலனமற்று நின்றுவிட்டது....
சூரியன் அந்தப் பெண்ணின்
கூந்தலில் சிக்கியிருக்கக்கூடும் ....
நிலவை ஒரு ஓநாய் தின்று
வாந்திஎடுக்கிறது...
சாக்கடையில் புறா ஓன்று
ஆழ்ந்து தூங்குகிறது....
அரக்கமரத்துக் கிளையில் உட்கார்து
ஒரு கொம்புடைய அணில் வெங்காயம் தின்கிறது....
அந்த அசுரனின் தூரிகை
சலனமற்று நின்றது....
புறா பள்ளத்தாக்கிற்கு
பயணித்தது .....!
கனவுகள் மீண்டும் வரட்டும்
அவன் தூரிகை
மீண்டும் சலனங்களின் கன்னத்தில்
தொடர்ந்து முத்தமிடுவதர்க்காக .....!
நரகங்கள் ரசனைகள் நிறைந்தவை.....!
கலாசுரன்
No comments:
Post a Comment