துக்கத்தின் ரீங்காரம் தழுவுகின்ற மனம்
ஏதேதோ சிந்தனைகளில்
உருவின்றித் தொலைகின்றது
ஏதேதோ சிந்தனைகளில்
உருவின்றித் தொலைகின்றது
தொலையும் இடங்களில் இருந்து புறப்படும்
சில முரட்டுக்கனவுகளும்
அழுது தீர்க்கப்படாத சோகங்களும்
சூதாடுகின்றன ....
சில முரட்டுக்கனவுகளும்
அழுது தீர்க்கப்படாத சோகங்களும்
சூதாடுகின்றன ....
விருப்பங்களை விசாரிக்காமல்
ஆட்டத்தில் வைக்கப்பட்டது
சீர்குலையாத மனதின் ஒருபகுதி ....!
வெற்றி யார் பக்கமாயினும்
மனதின் நிரந்தர சீர்குலைவு நிச்சயமாக்கப்பட்டுவிட்டது ....
ஆட்டத்தில் வைக்கப்பட்டது
சீர்குலையாத மனதின் ஒருபகுதி ....!
வெற்றி யார் பக்கமாயினும்
மனதின் நிரந்தர சீர்குலைவு நிச்சயமாக்கப்பட்டுவிட்டது ....
மீளுதலுக்கான விதிமுறைகள் ஏதேனும்
இந்த ஆட்டத்தில் இருக்கக்கூடுமா?
பகடைகள் உருட்டப்படுகின்றன
கலாசுரன்
இந்த ஆட்டத்தில் இருக்கக்கூடுமா?
பகடைகள் உருட்டப்படுகின்றன
கலாசுரன்
2 comments:
ஆம்.
பகடைகள் உருள்கின்றன..
மிக்க நன்றி கவிதைக்காரன்
Post a Comment