Wednesday, April 21, 2010

நிகழாத முத்தங்கள் ...

முன்னிருக்கும் 
கண்ணாடிக்குவளை 
தன் உள்ளிருக்கும் 
குளிர் நீரைப் பருக 
அவள் 
தன்னை முத்தமிடக்கூடும் 
என்று வியர்வை சிந்தியபடி 
காத்திருக்கிறது.... 


அவ்வியர்வை துளிகள்
குவளையின் பாதத்திலிருந்து 
நதியெனப் பெருக்கெடுத்து 
மேஜை விளும்பிளிருந்து 
ஒவ்வொரு சொட்டாக குப்பரக் குதித்து 
அவள் பாதத்தில் 
காத்திருப்புகளை 
மோதி நினைவூட்டும்படிக்கு 
குளிரை சிதறச் செய்து வழிகிறது 


அதற்க்கான 
கவனங்களைபறிகொடுத்தபடி
அக்கண்ணாடிக் குவளையும் 
அவள் விழிகளும் 
வியர்வை சிந்தியவாறு 
காத்திருக்கின்றன .... 


கலாசுரன்


நன்றி உயிர்மெய், உயிரோசை 
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2965  

2 comments:

Elango said...

நிகழாத முத்தங்கள்...காத்திருப்புக்கு அச்சாரமிடுகின்றன..

கலாசுரன் said...

ஆம் கவிதைக்காரன் அதன் தவிப்புகளை உணர்ந்திருக்கிறீர் நன்றி

Post a Comment