Saturday, April 17, 2010

அளவியல் ..!

உனக்கும்
அவள் நிழலுக்குமான
தூரத்தை
காதல் என்றழைத்தாய்...

அமாவாசைக்கும்
இருளுக்குமான
இடைவெளியை
உன் கவிதைகளின்
உற்பத்திக்கான கருவரையாக்கினாய் ..

ஒரு புள்ளியிலிருந்து
விரிவடைந்து
செல்லும் வட்ட அலைகள்
ஓரங்களில் சென்றடையும்
நேரத்தை
கற்பனைப் பொற்காலம் என்றாய்...

இரவின் சப்தங்களைத்
தொகுத்து
மௌனக்குவளயில்
ஊற்றி 
உயிர் கொடுக்கும் 
அமுதென்று சொல்ல ..

அவள் சிரித்தாள் ...!

இது தான்
உனக்கும்
மரணத்திற்குமான
தொலைவு என்று சொல்லி மடிந்துபோனாய்....!


கலாசுரன்....

No comments:

Post a Comment