Saturday, April 24, 2010

பொறுமை மிகு சாத்தான் ...!

படைத்ததின் ஆனந்தமும் 
கிடைத்ததின் மிச்சப்போருளும் 
சுமந்து செல்லும் நெகிழ்வு 
 சோம்பேறியாய் உட்காராத காலங்களின்
 உமிழ்நீரை இறுமாப்புடன் விழுங்கி 
 விடுதிகள் தோறும் நடக்கிறது 
மௌனமாய் மிதந்தபடி சிலநேரம் மூழ்கியவாறு ... 
 தவறுகள் அனைத்தும் செய்தவன் யார்? 
ஒன்றும் தெரியாமல் எங்கோ இருந்து 
 அழுதபடி மௌனம் பழகும் 
ஒரு சாத்தான்....! 


 கலாசுரன்

Thursday, April 22, 2010

நிரந்தர இருள் ...!

உருவங்களை முத்தமிட்டு நிற்கும் 
ஒளிமறை இருளென பகல் நிழல்கள் ....
அதன் எல்லைகள் நெடுக
இருளிற்கும் ஒளிக்குமான
பகிர்வு நடந்துகொண்டுதான் இருக்கக்கூடும்....
ஒரு முடிவு என்பதாக
இருளே நிரந்தரம் என்று ஒளி சோர்ந்து
எங்கும் இருள் இரவு
அதன் பெருந்தன்மை என்பதாக அடுத்த பகல்....!
உருவங்களின் பின்னால்
ஒளிந்து தொங்குகிறது
இருளின் புதிதான படிமங்கள்.......!!



 கலாசுரன் 

 நன்றி உயிர்மை, உயிரோசை ... http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2935

Wednesday, April 21, 2010

நிகழாத முத்தங்கள் ...

முன்னிருக்கும் 
கண்ணாடிக்குவளை 
தன் உள்ளிருக்கும் 
குளிர் நீரைப் பருக 
அவள் 
தன்னை முத்தமிடக்கூடும் 
என்று வியர்வை சிந்தியபடி 
காத்திருக்கிறது.... 


அவ்வியர்வை துளிகள்
குவளையின் பாதத்திலிருந்து 
நதியெனப் பெருக்கெடுத்து 
மேஜை விளும்பிளிருந்து 
ஒவ்வொரு சொட்டாக குப்பரக் குதித்து 
அவள் பாதத்தில் 
காத்திருப்புகளை 
மோதி நினைவூட்டும்படிக்கு 
குளிரை சிதறச் செய்து வழிகிறது 


அதற்க்கான 
கவனங்களைபறிகொடுத்தபடி
அக்கண்ணாடிக் குவளையும் 
அவள் விழிகளும் 
வியர்வை சிந்தியவாறு 
காத்திருக்கின்றன .... 


கலாசுரன்


நன்றி உயிர்மெய், உயிரோசை 
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2965  

Saturday, April 17, 2010

அளவியல் ..!

உனக்கும்
அவள் நிழலுக்குமான
தூரத்தை
காதல் என்றழைத்தாய்...

அமாவாசைக்கும்
இருளுக்குமான
இடைவெளியை
உன் கவிதைகளின்
உற்பத்திக்கான கருவரையாக்கினாய் ..

ஒரு புள்ளியிலிருந்து
விரிவடைந்து
செல்லும் வட்ட அலைகள்
ஓரங்களில் சென்றடையும்
நேரத்தை
கற்பனைப் பொற்காலம் என்றாய்...

இரவின் சப்தங்களைத்
தொகுத்து
மௌனக்குவளயில்
ஊற்றி 
உயிர் கொடுக்கும் 
அமுதென்று சொல்ல ..

அவள் சிரித்தாள் ...!

இது தான்
உனக்கும்
மரணத்திற்குமான
தொலைவு என்று சொல்லி மடிந்துபோனாய்....!


கலாசுரன்....

Wednesday, April 14, 2010

பைத்தியம் ...!

நேற்று முன்தினம் அவன் சிரித்தான் 
அழுதான் 
மண்ணில் புரண்டான்
 எழுந்து நின்று 
அவ்வழி வந்த பெண்களை வசை பேசினான் .....!
 பார்த்தவர்கள் சிரித்தார்கள் ...! 
பைத்தியக்காரன் என்றார்கள் ....! 


 நேற்று அவன் சிரித்தான் 
அழுதான் 
மண்ணில் புரண்டான் 
எழுந்து கோயிலைப் பார்த்து 
கடவுளை வசை பேசினான்...!
பார்த்தவர்கள் கோபமுற்று அவனை அடித்தார்கள்... !


 இன்று அவன் சிரித்தான்
 அழுதான்
 மண்ணில் புரண்டான் 
எழுந்து அரசியல் பிரமுகரின் படத்தைப் 
பார்த்து வசை பேசினான் 
பார்த்த அவர்கள் வெறிகொண்டார்கள் 
பிறகு அவனைக் கொன்றார்கள்....! 


 கலாசுரன் 
நன்றி கீற்று.... http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8558:2010-05-12-14-50-04&catid=2:poems&Itemid=265