Tuesday, March 16, 2010

அடுத்த பயணத்தின் காற்றைக் கிழிக்க அலகு தீட்டும் வேனல்ப் பறவை...





காற்றில் மிதந்து வந்த
வெகுதூரப் பயணத்தின்
முடிவை ....

ஒரு
பூவரசு மரத்தின் உலர்ந்த
கிளைமேல்
அமரவைத்து ....

தன் அலகை
இறகுகளில்
மிளிரத் தீட்டி ....

அடுத்த பயணத்தின்
காற்றைக் கிழிக்க
தயார் செய்தபின் ...

தான் கடந்து வந்த
அகலப் பாதைகள்
பரிசளித்த ...

நிகழ்வுகளின் பிரம்மிப்பை
அவைகளின்
நிழல்களும் மீளாமல்....

மெய் சிலிர்க்க
உதறித் தொலைத்துவிட்டு ...

பயணங்கள்
வாழ்க்கையாகக்
கொண்டு

இன்னுமொரு
திசைநோக்கிப்
பரந்தகன்ற்றது ...

அவ்வேனல்ப் பறவை...!


கலாசுரன்

நன்றி கீற்று

No comments:

Post a Comment