Monday, February 15, 2010

குப்பயாய் மிதித்த வார்த்தைகள் !!!

தொண்டைக் குழியிலும், இதழோரங்களிலும், மனதின் ஆழங்களிலும்,சில தயக்கங்களிலும், நழுவவிட்ட சில தருணங்களிலும், வெளிவராது சிக்கித்தவித்த சில வார்த்தைகளை உயிரிழந்தாய் நினைத்துசடலங்களென புதைத்திருந்தேன்! நாங்கள் உயிரிழந்த சடலங்கள் அல்லபுதைக்கப்பட்டவர்களும் அல்ல! நீ நட்ட விதைகளே! என இன்று கவிதைகளாய் முளைத்திருக்கின்றன! இப்போது நான் கவிதைப் பூவனத்தில் நீரூற்றி சேவை புரிகிறேன்! காத்திருப்புகள்கூட சிலநேரம் நல்ல கனிதரும் தருணங்கள் ஆகக் கூடும் ! மௌனங்கள் கூட சிலநேரம் இசை பாடக் கூடும் ! நாம் குப்பயாய் மிதித்த வார்த்தைகள் கூட சில சாதனைகளாய் முளைக்கக்கூடும்! கலாசுரன்

No comments:

Post a Comment