Saturday, February 13, 2010

சகுனம்.........!

நாய் மிரட்டித் துரத்த முதலடி வலதாய் வைத்து ஓடத் துவங்குவோர் உண்டா.......? இடத்தடி வைக்க ஓட்டம் சீராய் அமையாதென நினைப்பவர் உண்டோ......? வலத்தடி முதலடியாய் வைத்தோட தீமை நேரதென என்னதான் நிச்சயம்........? இரண்டு காலும் இருப்பவனுக்கு சகுனம்.........! இல்லாதவனுக்கு தானிழந்த பொக்கிஷம் ..........! தன் உடலையே பிரிவினை பார்ப்பவன் ஒன்றாய் நம் உலகையே காண்பது எவ்விதம்......? இழக்கும்போது தான் தெரியும் கெட்ட சகுனமாய் நினைத்த காலின் மகிமை...! கலாசுரன்

No comments:

Post a Comment