Thursday, February 25, 2010

தர்க்கொலைகள் தொடரும்!

விடிகையில் மங்கை இவள் கண் விழிக்கையில் வெண்ணிலவு கர்வமிழந்து இவள் அழகைப் பார்த்து வெட்கி மேக போர்வைக்குள் ஒளிந்து பின் மேற்கு கடலில் குதித்து தற்கொலை செய்தது! அப்படியே இவள் சோம்பலை ரசித்தபடி இருக்கையில். சட்டென செம்முகத்துடன் கிழக்குமலைகளையும் தாண்டி வந்தவன் அவள் மேல் கடைக்கண் பார்வை வீச நான் சினமுற்றேன்! என்மனம் புரிந்தவள் இவள் எழும்பி ஜன்னலின் கதவை கொட்டி அடைத்து பின் கரங்களால் அனைத்த்டபடி இதழ்களால் அவளை முழுமையாக எனக்கு எழுதிவைத்தாள்! ஒரு நாள் முழுதும் முயற்சித்தும் அவள் பார்க்காததால் அவனும் சினமுற்று முகம் சிவந்து கலக்கமுற்று மேற்ர்க்குக் கடலில் விழுந்து மடிந்தான். அவள் மெல்ல சொன்னாள் ஜன்னல் திறக்கவேண்டாம்! தர்க்கொலைகள் தொடரும்! கலாசுரன்

No comments:

Post a Comment