Thursday, February 25, 2010

புத்தன் வெட்டிய போதிமரம்

ஞானம் போதித்த புத்தனோ ஞானம் பெற்றது மனத்தடியில் மரத்தடி தருவது நிழல் மனத்தடி பெறும் ஞானம் தருவது எழில் என புத்தர் சொல்ல மரத்தடியை புனிதமக்கினர்கள் புத்தரின் ஞான சொற்க்களை அல்ல....! இந்த மூடம் மறைய வெட்ட மாட்டனா புத்தன் போதிமரத்தை......? வெட்டிட சாய்ந்தது மரம் மட்டுமல்ல உலகத்தின் மூட நம்பிக்கையும் தான் என புத்தன் பெருமூச்சு விடுகையில் கேட்டினார் கோயிலொன்று சில நாட்களில் புத்தருக்கல்ல போதிமரத்திற்கு........! என்னென்ன நன்மைக்குசொன்னாலும் செய்தாலும் நாங்கள் முட்டாள்களாகவே இருக்க விரும்புகிறோம்.........! புத்தனின் நல்வார்த்தை கேட்டு திருந்தவில்லை போதிமரத்துக் கோயிலில் திருவிழா............! கலாசுரன்

No comments:

Post a Comment