Thursday, February 25, 2010

அவள்.......!

என் இதயத்தோற்றமே அவள்தான்! என் இனிய நினைவாலயமும் அவள்தான்! என் இசை ஞானத்தின் ஆதாரமும் அவள்தான்! என் இன்பமாம் அன்பின் உச்சகட்டமும் அவள்தான்! அவள் என்னை தீண்டாத இடமில்லை! அவள் என்னை அணைக்கையில் சொர்க்கம் கூட ஒன்றுமில்லை! அவள் தான் என்னை முதலில் நேசித்தால் நானில்லை! அவளை கணவன் தீண்டாத பாகம் கூட நான் தொட்டிருக்கிறேன்! அவளை மறப்பதை விட நான் மரணத்தை ஏற்கிறேன்! அவளை காண்கையில் மூஉலகமும் காண்கிறேன்! அவளை கேட்கையில் இசையில் மிதக்கிறேன்! அவள் புன்னகை என் சொர்க்கம்! அவள் அன்பில் நான் அடக்கம்! அவள் மகிழ்ச்சியே என் நோக்கம்! அவள் மடியில் என் மயக்கம்! அவள் கலக்கம் என் துக்கம்! அவள் சொல் ஞானத்தின் ஒரு பக்கம்! அவள் இல்லையேல் எனக்கு தயக்கம்! அவள் என் தாயென சுருக்கம்! அவள் காலடிகளில் என் வணக்கம்! கலாசுரன்

No comments:

Post a Comment