Thursday, February 25, 2010

மறந்ததென்னவோ?

வியர்வை நதியோரங்களில் ஓய்வெடுக்கும் நேரம் மறந்ததென்னவோ? விழியோர மழைச்சாரலில் ஒதுங்கி நின்ற நேரம் மறந்ததென்னவோ? கணநேர தென்றலில் கண்மூடி நின்றநேரம் மறந்ததென்னவோ? மலர்களின் வாசனையில் மனம் மறந்து நின்ற நேரம் மறந்ததென்னவோ? சிரமம் சேர்ந்து சிகரமுனைக்கு ஏறி சிரிப்புடன் சித்தம் மறந்த நேரம் மறந்ததென்னவோ? சித்தம் சிதறுண்டு சினம் கொண்ட நேரத்தில் மறந்ததென்னவோ? மனம் மகிழுந்து சினம் மறந்து நகைத்த நேரத்தில் மறந்ததென்னவோ? உயிரின் உயிரான உண்மை தோழா உண்மையில் சொல்கிறேன் உன்னையல்ல! கலாசுரன்

No comments:

Post a Comment