Saturday, February 13, 2010

உயிரோட்டம்...........!

நீல வான் மண்ணில் நடமாடும்மேக மரங்கள்...! அவைகளின் இலயுதிர்காலமாய்மழை...! அடிக்கடி வேர்விட்டுச் செல்லும் மின்னல்கள்..! பல நாட்களாய் மெல்ல மலர்ந்து மூடி உதிரும் மலராய் நிலவு........! இரவின் அல்லி மலர்களாய் நட்சத்திரங்கள்..! அவைகளின் ஓய்வு நேரமாய் பகல்......! வட்ட எரிதழலாய் கதிரவன்....! மேகங்களை அன்பு முத்தமிடும் மலைச் சிகரங்கள்.....! ஓவியனாய் வானுக்கு வண்ணம் தீட்டும் வைகறை........! இயற்கையை வருடித் தூங்கச் செய்யும் தென்றல்.....! களிப்பூட்டும் குதூகலமாய் காற்று.......! காற்று அழைக்க சேர்ந்தே சுற்றுலா செல்லும்தூசிகள்........! இப்படி எண்ணிலடங்கா விந்தைகள்........! இவைகளுக்கெல்லாம் உயிரோட்டம் எங்கே......? கலாசுரன்

No comments:

Post a Comment