Thursday, February 25, 2010

சந்தித்ததிருவரும்..........!




*
உச்சந்தலை மச்சக்கருகுழல்
சுற்றும் கலை வட்டச்சுடரொளி
இரட்டைக் கதிரவன் வட்டக்கடைவிழி 
சொட்டும் தேனென பட்டுப்புன்னகை 
செக்கச் செவ்விதழ் மட்டும் தருவது
இரட்டைப் பொட்டென கன்னக்குழியதும்
மொட்டுத்தழலொடு மூக்கின் நுனியதும் 
இட்டிச் சுவையோடு வெட்டும் சொல்லோடு 
விண்ணின் நடையுடை மற்றும் காண்பது 
குத்தித் துளையிடும் கத்திப்பார்வையும் 
எட்டிப்பிடிக்கையில் கொட்டிப் பறந்திடும் 
வெட்டுக்கிளியென சுற்றிப்பரந்திட 
உச்சிப் புலமையில் முட்டிச் சொன்னது
வெட்கப் பதிலொடு கட்டிப் பதிலளி 
இரட்டைப் பிறவியில் ஒற்றைப் புலவனாய் 
சட்டப்பலகையில் மொத்தம் ஆற்றிட 
முத்தம் கொண்டெனை வெட்டிப் பலியிடு 
சொல்லுக்கமுதமாய் முத்துக் கிணையென 
ஓட்டிப் பகிர்திடு இரட்டைக் கிளவியாய்..
*
***
கலாசுரன் 

நன்றி எதிர்நீச்சல் 

No comments:

Post a Comment