Thursday, February 25, 2010

ஒரு இனிய காதலின் விந்தை!




மின்னலை அழகென பார்த்து ரசித்தவன்!
இடியோசையை இசையென கேட்டு மகிழ்ந்தவன்!
புயலும் பேரலையும் தாக்கிட மலைபோல் நின்றவன்!
இருந்தும் இபோழுதெல்லாம்
ஒரு பட்டாம்பூச்சி பரந்தகல
அவன் விழிகள் கலங்கின!
ஒரு பூ மலரும் ஓசையில்
அவனது இதயம் நடுங்கி சிலிர்த்தது!
ஒரு சிறு தென்றல் அவனை வருட
நிலைகுலைந்து மண்ணில் சாய்ந்தான்!
ஒரு சிறு சாரலில் ஏனோ
ஒன்றுமில்லாமல் கரைந்துபோனான் ..!


கலாசுரன் 

No comments:

Post a Comment