Thursday, February 25, 2010

மதுவும் பாதி மறைத்திடும் போர்வை......!

போர்வைகள் வானம் பார்க்க குப்பற படுக்கையில் நித்திரை சட்டெனக் கனவுகள் மின்னிடும் பார்வை....! செந்நிற கண்களோ விழித்திட பனி சூழ்ந்ததொர்ப் பார்வை.........! சுற்றிலும் நிழல் நாடகம் சற்று தெளிவின்றி அரங்கேற மதுவும் பாதி மறைத்திடும் போர்வை......! சலனங்கள் கூட சிலநேரம் தள்ளாடும் உடலதை சீர்நிருத்த முயன்றிட உடலும் சிந்திடும் சுடும் வியர்வை..........! விழித்திடத் தூங்கிடும் கண்களும் எழுந்திடப் பதறிடும் பாதங்களும் கழுத்து தொங்கிக் கேட்டிடும் ஒரு மறைவை......! சில அரூப நூல்களில் தொங்கிடும் உறுப்புக்களின் தொகுப்பாய் இயங்கிடும், நாமோ செயலிழக்கும் பாவை.......! தெளிந்திட தோன்றுவது கழைப்புடன் ஒரு மௌனப் புன்னகை இதற்க்கெல்லாம் நமுக்கு என்ன தேவை.......! கலாசுரன்

No comments:

Post a Comment