Thursday, February 25, 2010

ஆடை.........!

காலைக் கதிரவன் பூமிக்கு பொன்னாடை போர்த்துகிறான் பொன் வெயில் பட்டாடை! . . இரவோ போர்த்தியது தூங்கும் நேர கறுப்பாடை இருளெனும் இருட்டாடை! . . வைகறை வானுக்கு சிவப்பாடை போர்த்திட விழிகளுக்கது எழிலாடை! . . ஒரு நாளில் எத்தனை ஆடயடி நீ பூணுகிறாய் .......? . . வழியோரம் கைநீட்டும் உன் மழலைகளின் ஆடை என்னடி தாயே? ஒருகணம் பாரடி நீயே.......! . . இன்னுமா உனக்கு தேவை இத்தனை ஆடம்பரம்? கலாசுரன் .

No comments:

Post a Comment