Thursday, February 25, 2010

கடலை! கடலை ரசித்தபடி கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி கடற்கரையில் தோழியுடன் இருக்கையில் கடலை கடலை என்றான் சிறுவன்! கடலை பொட்டலம் வாங்கி அவனை அனுப்பிவிட்டு கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்! கடலைக் காணவந்தவன் ஒருவன் கடலைப் பார்த்தபடி அருகில் வந்து கடலையா.................? என்றான்! கடலை தான் கேட்கிறான் என்று கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு கடலைப் பார்த்தது போதுமென்று கடலை விட்டு நீங்கி செல்கையில் கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட கடலை என்னவென்று தோழி எனக்கொரு கடலை வகுப்பெடுத்தாள்! கடலை போடுவது பற்றி! கடலையில் இப்படியும் ஒரு வகையா? என கடற்கரையை நினைத்து நகைத்தேன்! கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு! கலாசுரன்

No comments:

Post a Comment