Monday, February 15, 2010

வெண்ணிலா என்ன ஆனாள்?

வெண் நிலவை கார்மேகப் படுக்கையில் விட்டில் பூச்சிகளின் தாலாட்டில் தூங்க வைத்தது இரவு! லவும் கண்ணசந்து தூங்க மழைப் பட்டு துளி இழைத் தாவணி உடுத்துக் கிளம்புகிறாள் இருள்மகள்.....! பகலவன் கையில் அகப்பட தன் கர்ப்பை இழக்கக்கூடும் என்பதாலா? தெரியவில்லை! சட்டென நிகழ்ந்ததோர் திருப்பம்! கண்களின் காட்சியை பறித்துச் சென்றது ஒளியாய் மின்னல்! சேர்ந்தே அதிர திணறடித்தது இடியென ஓசை க்கதை அடைத்தது! விழிதெளிந்து பார்க்கையில் பகலவன் வந்துவிட்டான்! இருள்மகளைக் காணவில்லை! நிச்சயம் தப்பிச் சென்றிருப்பாள்! இதும் ஒருவகை கண்ணாமூச்சி ஆட்டமா? இருவர் காதலின் ஊடலா? ஒருவர் தோன்ற இன்னொருவர் மறைகிறார்களே? இவர்களின் கூடல் தான் எப்போது? ஆராயத் துவங்கியவன் பார்வையும் கேழ்வியும் இயற்கையே பரித்துவிட்டதும் விந்தை தான்! இரண்டும் திரும்ப பெறுகையில் சகலமும் முடிந்து கேழ்விகள் மட்டும் எழுகிறது! முடிவெடுத்தேன்! இவர்கள் காதலிலோ, மோதலிலோ, ஊடலிலோ, கூடலிலோ எனக்கென்ன வேலை? இயற்கையின் மர்மங்கள் தான் இயற்கைக்கே அழகு! அனால் தூங்கிக் கிடந்த வெண்ணிலா என்ன ஆனாள்? கலாசுரன்

No comments:

Post a Comment