Thursday, February 25, 2010
உன்னைப் ரசிக்கையில் !
உன் வெட்கம் பார்த்து
புது புது கவிதை பிறக்கும்!
உன் நளினம் பார்த்து
மனங்களும் கனவில் மிதக்கும்!
உன் நடையை பார்த்து
அன்னங்களும் நடக்கப் பழகும்!
உன் நிறத்தைப் பார்த்து
வித வித பூக்கள் எங்கும்!
நீ நிலத்தைப் பார்க்க
கர்ப்பனைகள் சிரத்தை எட்டும்!
நீயும் சிரிக்க
மின்னலென கண்கள் கூசும்!
உன் உடலைப் பார்த்த
சிலைகளும் நொறுங்கித் தவிக்கும்!
நீயும் பேச
குயில்களும் சரணம் பாடும்!
உன் முகத்தைப் பார்த்து
நிலவென அலைகள் பொங்கும்!
உன் நிழலைப் பார்த்து
இரவென நிலவும் உதிக்கும்!
உன் இதழைப் பார்த்து
கனியென கிளிகள் கொஞ்சும்!
நீயும் தீண்ட
என்னுயிர் சொர்க்கம் செல்லும்!
நாமும் சேர
மரங்களும் மலர்கள் சிந்தும்!
விழித்தபோழுதில்
ரசனைகள் கரைந்து போகும்!
ரசித்த யாவும்
கனவென அறிந்ததுள்ளம்!
படுக்கை மடக்கி
பட பட எழுந்து செல்லும்!
நடந்த யாவும்
அடடட கனவுமட்டும்!
கலாசுரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment