Saturday, February 13, 2010

நான் கவிதை பழகுகிறேன்...!

உலர்ந்த வேனலைக் காகிதமாகி மொத்த இரவுகளின் கறுப்புச் சாயம் அதில் பூசி அதில் வெண்ணிலவையும், வெண்மேகங்களையும் வெண் நீர்வீழ்ச்சியும், வெண் பணியும் சேர்த்து கடைந்தெடுத்த குச்சியால் எழுதி எனக்கு கவிதை வகுப்பெடுக்கிறாள் தமிழன்னை! ஆர்வம் காணிக்கையாய் வைத்து சோகங்களை மறந்து ஐம்புலன்களும் ஓன்று திரட்டி நான் கவிதை பழகுகிறேன்! கலாசுரன்

No comments:

Post a Comment